1-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது!- பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி அறிவிப்பு.

திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான குடோனுக்கு இன்று (25.04.2022) தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி திடீரென வருகை தந்தார். பின்னர் பாடபுத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்றும், புத்தகம் ஏதேனும் சேதமடையாமல் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கிருந்த அதிகாரிகளிடம் புத்தகங்கள் கையிருப்பு உள்ளது பற்றி விவரம் கேட்டறிந்தார்.

மேலும்,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 141 அரசு பள்ளிகள், 106 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 21 சுயநிதி பள்ளிகள், 27 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 295 பள்ளிகள் உள்ளது என்றும் மாவட்டத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் தயாராக இருப்பதாகவும் அதனை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்ததாகவும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகள் மற்றும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் ஜூன் மாதம் முதல் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் வழங்குவதற்கு புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply