மின் கம்பியில் உரசியதால் தேர் தீப்பற்றி எரிந்தது!-தஞ்சை அருகே அப்பர் சதய விழா தேரோட்டத்தில் நடந்த விபரீதம்!-தலைவர்கள் இரங்கல்.

https://m.facebook.com/story.php?story_fbid=160381919798176&id=100074791064866

தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின் வபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

The loss of life, including that of children, due to electrocution in a procession in Thanjavur is a tragedy beyond words. My deepest condolences to the bereaved families. I pray for the speedy recovery of the injured.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறவிப்பு.

தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகில் களிமேடு அப்பர்சாமி திருமடத்தின் தேர்த் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து, 12 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயம்; அவர்களுள் 4 பேரின் நிலைமை கவலைக்கு இடமாக இருப்பதாக வந்திருக்கின்ற செய்திகள், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்துகின்றது. தேர் வந்த வழியில் புதிய சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால், சாலை சற்றே உயர்ந்து இருப்பதையும், தேரின் உயரம், மின் கம்பங்களின் உயரத்தையும் சரியாகக் கணிக்கத் தவறி விட்டனர். தேர்ச்சக்கரங்கள் உருளுவதற்கு ஏதுவாக தண்ணீர் ஊற்றி இருக்கின்றார்கள். ஒரு இடத்தில் சற்றே தேங்கி நின்ற தண்ணீரில் சக்கரங்கள் நழுவி, மின் கம்பத்தின் மீது சாய்ந்தது, ஜென் செட் வெடித்துச் சிதறியதால், இந்த அளவிற்கு கடுமையான விபத்து நிகழ்ந்து இருப்பதாகத் தெரிகின்றது.அண்மையில் மதுரையில் நடைபெற்று முடிந்த கள்ளழகர் திருவிழாவில், பல இலட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் இறந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கின்றது. மதுரையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானவர்கள்நெருக்கியடித்துக் கொண்டு, வடம் பிடித்து இழுத்துச் சென்றதைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்திற்குப் பிறகு நடக்கின்ற இத்தகைய திருவிழாக்களில், கொரோனா கட்டுப்பாடுகள் எதனையும் மக்கள் பின்பற்றவில்லை. ஏற்கனவே பல ஊர்களில் தேர்கள் சரிந்து பலர் இறந்திருக்கின்றார்கள், பலர் உடல் உறுப்புகளை இழந்து இருக்கின்றார்கள்.எனவே, இன்றைய நிகழ்வை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கேடுகள் நேராத வண்ணம், தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். தாஜ்மகாலைப் பார்க்க, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேர் வரையிலும் வந்து கொண்டு இருந்தார்கள். எனவே, உத்தரப் பிரதேச அரசு, இணைய வழி முன்பதிவை அறிமுகம் செய்து, ஒரு நாளைக்கு 40000 பேர்தான்பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுபோல, காலத்திற்கு ஏற்ப, ஒரு இடத்தில் இவ்வளவு பேர்தான் கூடலாம் என்பதைக் கணக்கிட்டு, திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு உச்சவரம்பு வரையறை வகுக்க வேண்டும். தேர்களின் மரச்சக்கரங்கள் பழுது அடைந்த காரணத்தால், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான தேர்களுக்கு, திருச்சி பெல் நிறுவனத்தார் இரும்புச் சக்கரங்கள் ஆக்கித் தந்தார்கள். அதுபோல, இனி தேர்களை ஆட்கள் இழுப்பதற்குப் பதிலாக, இழுவைப் பொறிகளைக் கொண்டு இழுத்துச் செல்வதற்கு, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். களிமேடு திருவிழாவில் உயிர் இழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசு உரிய இழப்பு ஈடு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்ற தேர் ஊர்வலத்தின் போது, மின்சாரக் கம்பிகள் மீது தேர் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு என்னுமிடத்தில் நடந்துள்ள மின் விபத்தில் 11 பேர் பலியாகியிருப்பது பெருந்துயரமளிக்கிறது. மேலும் 4பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. அப்பர் என்னும் திருநாவுக்கரசரின் சதயத் திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேரின் உச்சிப்பகுதி உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் திடுமென தீப்பிடித்து இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது நெஞ்சை உறையவைக்கும் கொடூரமாக உள்ளது. இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் யாவருக்கும் விசிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/04/12/71238/

Leave a Reply