2022 மார்ச் மாதத்தின் தொழில் துறை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணினை (2016 = 100) தொழிலாளர் நலப் பிரிவு வெளியிட்டுள்ளது.

2022 மார்ச் மாதத்தின் தொழில் துறை பணியாளர்களுக்கான  நுகர்வோர்  விலைக்குறியீட்டு எண்ணினை (2016 = 100) மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த தொழிலாளர் நலப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்த அகில இந்திய குறியீட்டு எண் 1.0 புள்ளி அதிகரித்து 126 .0 ஆக உள்ளது. 1 மாத சதவீத மாற்றத்தில் முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.50 சதவீதம் அதிகரித்து 0.80 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த மாற்றத்திற்கு தற்போதைய குறியீட்டில் அதிகபட்ச உயர்வான 0.59 சதவீதத்திற்கு உணவும்,குளிர்பான வகைகளும் காரணமாகும். குறியீட்டு எண் உயர்ந்து காணப்படுவதற்கு  எருமைப்பால், பசும்பால், கோழிப்பண்ணை பொருள்கள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய், ஆப்பிள் , கேழ்வரகு போன்ற உணவு தானியங்களும், சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவையும் காரணமாகும். இருப்பினும், விலை குறியீட்டு எண் உறைவதற்கு வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கட்டுப்படுத்தப்பட்டது காரணமாகும்.

நாட்டின் முக்கியமான 88 தொழில் துறை மையங்களில் பரவலாக உள்ள 317 சந்தைகளிலிருந்து  திரட்டப்பட்ட சில்லரை விற்பனை விலையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்  தொகுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான விலை குறியீட்டு எண் மே 31 அன்று வெளியிடப்படும்.

திவாஹர்

Leave a Reply