செமிகான் இந்தியா மாநாட்டில் ஸ்டார்ட் அப்களுடன் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துரையாடி ஊக்குவித்தார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், செமிகான் இந்தியா மாநாட்டில் கண்காட்சியைப் பார்வையிட்டு ஸ்டார்ட் அப்களுடன் கலந்துரையாடினார். மூன்று நாள் செமிகான் இந்தியா மாநாடு பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் கலந்துரையாடிய திரு ராஜீவ் சந்திரசேகர், அவர்களது பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார். அவர்களது கருத்துக்களை அரசிடம் தெரிவிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் டிஜிடல் பொருளாதார வளர்ச்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் ஸ்டார்ட் அப்கள் கணிசமான அளவுக்கு பங்காற்றியுள்ளதாகவும், மேலும் இதனை முன்னெடுத்து செல்லும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப்கள் தங்களது ஆற்றலை உணர்ந்து செயல்பட்டால், யுனிகார்ன் நிறுவனங்களாக தங்கள் நிறுவனங்களை மாற்ற முடியும் என்றும் கூறி அவர் ஊக்கமளித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply