பிரதமரின் அதிகாரபூர்வ குழுவில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ஜெர்மனி சென்றடைந்ததும், பெர்லினில் ஸ்டார்ட் அப்கள், மாணவர்கள், இளம் நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு பெல்லோசிப்கள், கூட்டு பயிற்சி திட்டங்கள், தொழில் வாய்ப்புகளை முதுநிலை ஆராய்ச்சி, முனைவர் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள், பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனி பிரதமர் திரு ஓலப் ஸ்கோல்ஸ் அழைப்பின் பேரில் ஜெர்மனி செல்லும் பிரதமரின் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் ஜித்தேந்திர சிங், அந்நாட்டு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பல்வேறு நிலைகளில் ஊக்குவிப்பு பெல்லோஷிப்களை வழங்குகிறது, இதில் முனைவர் பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் ஆகிய இரண்டும் அடங்கும். ஒரு கல்வி நிறுவனத்தில் ஐந்தாண்டு பணியாக அங்கு ஒருவர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
–எம்.பிரபாகரன்