ஒடிசா, கேரளா மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளை நிரப்புவதற்காக அங்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஒடிசாவின் பிரஜராஜ்நகர், கேரளாவின் த்ரிக்கக்கரா, உத்தராகண்டின் சம்பாவாத் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 31, 2022 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 3, 2022 (வெள்ளிக்கிழமை) அன்று எண்ணப்படும்.
மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 11, 2022. மே 12-ஆம் தேதி வேட்புமனுக்கள் சரிபார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி மே 16 (கேரளா சட்டமன்ற தொகுதி) மற்றும் 17 (ஒடிசா மற்றும் உத்தராகண்ட் சட்டமன்ற தொகுதிகள்).
கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றும், மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா