சங்கல்ப் ஜிஎஸ்டி மற்றும் சுங்கத் துறையின் வருடாந்திர மாநாடு!-மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான வியூகம் மற்றும் செயல் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி & சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர்கள்/ தலைமை ஆணையர்கள், முதன்மை தலைமை இயக்குநர்கள்/ தலைமை இயக்குநர்களின் வருடாந்திர மாநாடான ‘சங்கல்ப்’, மாமல்லபுரத்தில் மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய அரசின் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

கொவிட் பெருந்தொற்றின்போது மிகச் சிறப்பாகப் பணியாற்றி மத்திய நிதியமைச்சரின் பாராட்டுகளைப் பெற்றதோடு, நிதியாண்டின் துவக்கத்தில், அதாவது ஏப்ரல் 2022 இல் ரூ. 167540 கோடி வருவாயை ஈட்டியதற்காக சிபிஐசி-இன் அனைத்து அதிகாரிகளையும் தமது துவக்க உரையில் தருண் பஜாஜ் பாராட்டினர்.

முன்னதாக, வரவேற்புரை நிகழ்த்திய சிபிஐசி தலைவர் திரு விவேக் ஜோரி, வருவாய் வசூல், வரி ஏய்ப்பைக் கண்டறிவதற்கும், போலி ரசீதுகளை தடுக்கவும், பல்வேறு துறைமுகங்களில் போதை மருந்து கடத்துவதை கண்டறிவதற்கும், தரவு பகுப்பாய்வின் பயன்பாடு உள்ளிட்ட துறைகளில் 2021-22 ஆம் ஆண்டில் சிபிஐசி மேற்கொண்ட சாதனைகளை சுட்டிக்காட்டினார்.

சுங்கத் துறை முதன்மை ஆணையர் எம் வி எஸ் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply