சாலை மற்றும் நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதற்கான உலகத்தர உள்நாட்டு தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் உள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

சாலை மற்றும் நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதற்கான உலகத்தர உள்நாட்டு தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

ஆனால் தங்களது துறைகளுக்கு கிடைக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று கூறிய அவர், இதை மனதில் கொண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அமைச்சகங்களின் பிரதிநிதிகளோடு தனித் தனியாக அமர்ந்து உரையாடி தொழில்நுட்பத்தை அவர்கள் எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்கும் செயல்முறையை தாம் தொடங்கி உள்ளதாகக் கூறினார்.

சாலை கட்டமைப்பு மற்றும் நெடுஞ்சாலைகளில் மதிப்பு கூட்டலுக்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிஎஸ்ஐஆர் உருவாக்கி உள்ள இரண்டு உபகரணங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சாலைகளை அமைப்பதற்கும் சாலைகளில் உள்ள குழிகளை செப்பனிடுவதற்குமான இந்த இரண்டு உபகரணங்களின் அறிமுக விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) விகே சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply