சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் செவிலியர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் செவிலியர்களைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பும், கருணையும் போற்றத்தக்கது. சர்வதேச செவிலியர்கள் தினம் என்பது, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் அவர்களது அளப்பரிய பணிகளுக்காக அனைத்து  செவிலியர்களையும் பாராட்டும் நாளாகும்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply