தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில், மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்து சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில்,தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பயன்பாட்டிற்காக மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்து சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும், சென்னை, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply