தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ரூ. 1 கோடி பரிசு அறிவிப்பு.

பாங்காக்கில் நடைபெற்ற   பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் 14  முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி,  முதன்முறையாக பெருமைமிக்க தாமஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய ஆண்கள் அணிக்கு ரூ. 1 கோடி பரிசை, முன்னெப்போதும் இல்லாத வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், அறிவித்துள்ளார்.

திரு அனுராக் சிங் தாக்கூர் இந்த  முடிவுடன் வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.  “ப்ளே-ஆஃப் சுற்றில் மலேசியா, டென்மார்க் மற்றும் இந்தோனேசியாவுக்கு எதிரான தொடர்ச்சியான வெற்றிகளுடன் தாமஸ் கோப்பையை வென்ற இந்தியாவின் அசாதாரண சாதனை விதிகளை தளர்த்துவதற்கு வகை செய்தது. இந்த வார இறுதியில் இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்..

திவாஹர்

Leave a Reply