நேபாளத்தின் லும்பினியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் தியான மண்டபத்தில் நடைபெற்ற 2566 வது புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
அவருடன் நேபாள பிரதமர் மேதகு ஷேர் பகதூர் தூபா மற்றும் அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபா கலந்து கொண்டனர்.
மேலும் நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும்
லும்பினி வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவருமான திரு. பிரேம் பகதூர் ஆலே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புத்த துறவிகள், பௌத்த அறிஞர்கள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட 2500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் இரு நாட்டு பிரதமர்களும் உரையாற்றினர்.
–திவாஹர்