பிட்காய்ன், கிரிப்டோ கரன்ஸி போன்றவை மூலமாக நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!-காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அறிவுறுத்தல்.

பிட் காயின், கிரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது ஆபத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில், பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்து தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி உள்ளது.

இந்நிலையில், பிட் காயின், கிரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி, பிட்காயின் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். முதலில் பணத்தை முதலீடு செய்ய வலியறுத்தி பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாக நம்ப, மறுமுறையும் அதேபோன்று இரட்டிப்பாக பணத்தை அளித்து நம்ப வைத்து , அதன் பின்பு பணம் அதிகளவில் முதலீடு செய்த பிறகு ஏமாற்றி விடுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply