ஸ்வராஜிலிருந்து புதிய இந்தியாவுக்கு இந்தியாவின் கொள்கைகள் மறுபார்வை குறித்து தில்லி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலை வகித்தார்.
நாடு சுதந்திரத்தின் 75 வது ஆண்டு பெருவிழாவை கொண்டாடும் தருணத்தில் தில்லி பல்கலைக்கழகம் அதன் நூற்றாண்டை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோதி தலைமையின் கீழ் புதிய இந்தியா உருவாக்கப்பட உள்ளது என்று கூறிய அவர், உலகின் வல்லரசாக நமது நாட்டை உருவாக்க ஒன்றுபட்டு பாடுபட அழைப்பு விடுத்தார்.
எம்.பிரபாகரன்