யுபிஐ வசதி மூலம் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்வதற்கு அனைத்து வங்கிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!-ரிசர்வ் வங்கி உத்தரவு.

எல்லா வங்கிகளும் ஏடிஎம்களில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் முறையை கொண்டுவர வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எல்லா வங்கிகளின் ஏடிஎம்களிலும், மற்ற ஏடிஎம் ஆபரேட்டர்களும் கார்டு இல்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்காக எல்லா வங்கிகள் மற்றும் ஏடிஎம் நிறுவனங்களுடன் யூபிஐ தளத்தை ஒருங்கிணைக்கும்படி தேசிய பரிவர்த்தனைக் கழகத்துக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது யூபிஐ (UPI) ஆப்ஸ் வாயிலாக ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக்கொள்ளலாம்.

எஸ்.சதிஸ் சர்மா

One Response

  1. MANIMARAN May 21, 2022 11:09 pm

Leave a Reply