திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!-அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்கள் அகற்றியதில் பாரபட்சம்!- கட்சி பொறுப்பாளர்கள் வாக்குவாதம்.

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிந்தாமணி அண்ணாசாலையிலிருந்து பெரியசாமி டவர், காளியம்மன் கோயில் வழியாக ஆண்டார் வீதி நுழைவு பகுதி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று ( 20/05/2022) ஈடுப்பட்டனர்.

சாலையின் ஓரத்தில் இருந்த ஆளும் திமுக கட்சி கொடிக் கம்பம் தவிர; மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்கள் அனைத்தும் கனரக இயந்திரங்கள் (பொக்லின்) மூலம் இடித்து அகற்றபட்டன.

இதனால் ஆக்கிரமிப்பு அகற்றபட்ட பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஆம், ஆளும் கட்சிக்கு சாதகமாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செயல்படுவதாக இதர கட்சி பொறுப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

ஆளும் கட்சி கொடிக் கம்பத்தின் கொடியை மட்டும் அக்கறையுடன் இறக்கி பத்திரப்படுத்தும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், இதர கட்சிகளின் கொடிக் கம்பங்களை புல்டோசர் இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளியது ஒரு தலைப்பட்சமான செயல் என பாஜகவினர் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதே சமயம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று வித்தியாசம் பார்க்காமல் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அகற்றுவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அளித்து, முறையாக முன்கூட்டியே அதற்கான அறிவிப்புகளை வழங்கி, வாக்குவாதம், அடிதடி தீ குளிப்பு மற்றும் தற்கொலை முயற்சி மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாதவாறும், சட்டம் -ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமலும் மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படி செய்யவில்லையென்றால், இது ஆளும் கட்சிக்கு அவபெயரையும், களங்கத்தையும் உண்டாகும்.

-சுவாமிநாதன்.

Leave a Reply