நெல்லை கல்குவாரி விபத்து!-குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது!

கல்குவாரியின் உரிமையாளர் செல்வராஜ்.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள். விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கல்குவாரியின் உரிமையாளரின் மகன் குமார்.

இந்த விபத்து தொடர்பாக, ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த கல்குவாரியின் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம்  மங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/05/15/72775/

Leave a Reply