8 வது சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வு கர்நாடகாவில் உள்ள மைசூரில் ஜூன் 21, 2022 அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் 25 நாள் கவுண்டவுன் அனுசரிக்கப்படுகிறது என்றும், இதில் சுமார் 10 ஆயிரம் யோகா ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், மதிப்பிற்குரிய யோகா குருக்கள், முக்கிய பிரமுகர்கள், யோகா மற்றும் அதுசார்ந்த அறிவியல் வல்லுநர்கள், உள்ளூர் யோகா நிறுவனங்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த் சோனோவால் அறிவித்தார்.
–எம்.பிரபாகரன்