வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2000 கன அடி தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.

தேனி மாவட்டம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சராசரியாக பெய்ததால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக இருந்து வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக வைகை அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேலாகவே நீடித்து வருகிறது.

இந்தநிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளதால், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று (23.05.2022) வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

எஸ்.திவ்யா

Leave a Reply