26-ந் தேதி பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி வருகிற 26-ந் தேதி சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோதி வருகிற 26-ந் தேதி வருகை தருகிறார். இதுதொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோதி 26-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள பெகும்பெட் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ‘ஐ.ஏ.எப். பி.பி.ஜே.’ விமானத்தில் புறப்படுகிறார்.

சென்னை விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

எம்.பிரபாகரன்

Leave a Reply