வாணியம்பாடி அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒரு கிராமத்திற்குச் சாலை வசதி இல்லை. இறந்தவர் உடலை வீட்டுக்கு எடுத்த செல்ல கட்டையில் சுமந்து சென்ற ஊர் மக்கள்.இது போன்று ஆயிரக் கணக்கான கிராமங்கள் தமிழகத்தில் உள்ளது.
2021-22ஆம் ஆண்டு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்திற்கு திமுக அரசுக்கு நமது பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு வழங்கிய நிதி 440 கோடி ரூபாய் ஆகும்.
சாலைகளுக்கு தனது குடும்பத்தாரின் பெயரை சூட திமுக அரசுக்கு காட்டும் ஆர்வத்தை இது போன்று சாலை வசதிகளே இல்லாத கிராமங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியைச் சரியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
–சி.கார்த்திகேயன்