நாட்டில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நூறு லட்சம் மெட்ரிக் டன் அளவு வரை சர்க்கரை ஏற்றுமதி செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் 2021-2022 (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ந் தேதி முதல் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு 2022 ஜூன் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31, 2022 வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18, 2018-19, 2019-20 கரும்பு அரவைப் பருவங்களில் முறையில் 62 மெட்ரிக்டன், 38 மெட்ரிக்டன், 59.60 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2020-21-ல் கரும்பு அரவைப் பருவத்தில் 60 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 70 மெட்ரிக்டன் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2021-22 நடப்பு கரும்பு அரவைப் பருவத்தில் 90 மெட்ரிக்டன் அளவிற்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சர்க்கரை ஆலைகளில் இருந்து 82 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதில் 78 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உபயோகத்திற்காக 2 முதல் 3 மாதங்களுக்காக 60 முதல் 65 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply