புதுதில்லியில், இந்திய – யுஏஇ கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 11-வது கூட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் மேம்பாட்டு ராணுவ ஆணைய தலைவர் மேஜர் ஜெனரல் ஸ்டாஃப் ஹசன் முகமது சுல்தான் பானி ஹம்மத், இந்திய பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமாரை தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இணைந்து செயல்படுவதற்கான புதிய வழிகளை கண்டறியவும், ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இருநாடுகளிடையே தற்போதுள்ள கூட்டு பயிற்சிகளின் நோக்கம், அதிலுள்ள சிக்கல்களை களைவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
–எஸ்.சதிஸ் சர்மா