மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், 4 இடங்கள் திமுக-வுக்கும், 2 இடங்கள் அதிமுக-வுக்கும் உள்ளது. இதில் ஒரு இடத்தை திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

திமுக சார்பாக கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வேட்பு மனுவை சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சீனிவாசனிடம் தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து அதிமுக சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

மாநிலங்களை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நாளையுடன் நிறைவுபேறுகிறது. இதை தொடர்ந்து வேட்புமனு பரிசிலீனை ஜூன் 1ம் தேதியும், மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 3 ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. 

கே.பி.சுகுமார்

Leave a Reply