பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் 8 ஆண்டுகள் நிறைவையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் 8 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், பிரதமர் நரேந்திர மோதி, தனது அதிகாரத்தை சேவை செய்யும் கருவியாக நினைத்து, ஏழைகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான அவர்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதையின் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். பல வரலாற்று சாதனைகள் நிறைந்த இந்த எட்டு ஆண்டுகளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடந்த 8 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோதி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கனவுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து சிறகுகளை விரிக்க நம்பிக்கையை விதைத்துள்ளார் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி தனது திறமைான தலைமைத்துவத்தாலும், வலிமையாலும் நாட்டை பாதுகாப்பாக மாற்றியது மட்டுமின்றி, பல்வேறு முடிவுகளை எடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply