பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்புக்கான கொள்கையை தேசிய அனல்மின் கழகம் என்டிபிசி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் என்டிபிசி, புதுப்பிக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க கொள்கை 2022-ஐ வெளியிட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் விரிவான தொலைநோக்கை உருவாக்க இது உதவும்.

பல்லுயிர் பெருக்க கொள்கை என்பது என்டிபிசி என்பது சுற்றுச்சூழல் கொள்கையுடன் சேர்ந்த ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த கொள்கைகளை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

அதிக பல்லுயிர் பெருக்கம் உள்ள பகுதிகளில் செயல்பாடுகளைத் தவிர்ப்பது மற்றும் திட்டத் தளங்களை நியாயமாகத் தேர்ந்தெடுப்பது குறித்து என்டிபிசி எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் தற்போது இயங்கி வரும் அனைத்து தளங்களிலும் பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பை தவிர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

என்டிபிசி 2018 ஆம் ஆண்டில் பல்லுயிர் பெருக்க கொள்கையை வெளியிட்ட முதல் பொதுத்துறை நிறுவனமாகும். அதே ஆண்டில், என்டிபிசி இந்திய வணிகம் மற்றும் பல்லுயிர் முன்முயற்சியில் (IBBI) உறுப்பினரானது.

ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாப்பதற்காக ஆந்திரப் பிரதேச வனத் துறையுடன் ஐந்து ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்டிபிசி மேற்கொண்ட ஒரு பெரிய முன்முயற்சி ஆகும். ஆந்திர கடலோரப் பகுதியில் ரூ. 4.6 கோடிகள் நிதி பங்களிப்புடன், ஆமைகள் குஞ்சு பொறித்து கடலில் விடும் நடவடிக்கை என்டிபிசி ஒப்பந்தத்திற்கு பின்னர் 2.25 மடங்கு அதிகரித்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply