கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கி கணக்கை முடக்கவும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு!

திண்டுக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் இளஞ்செழியன், துணை ஆய்வாளர் ரவிசங்கர், சிறப்பு துணை ஆய்வாளர் வீரபாண்டி, முத்துவிஜயன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யூசுப்பியா நகரில் கரீம் தெருவில் சந்தேகப்படும்படி கையில் சாக்கு பைகளுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் (வயது 44) என்பதும், விற்பனைக்காக ரூபாய் 15000 மதிப்புள்ள 13 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், திண்டுக்கல்லில் கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கம் போதை பிரிவு கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மட்டும் இன்றி அவர்களின் வங்கி கணக்குகளை முடக்குவது, அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் கஞ்சா வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதுடன், அவர்களின் வங்கி கணக்கையும் முடக்கும்படி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி ஆந்திராவில் இருந்து லாரியில் 215 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த அருண்குமார் (வயது 33), சண்முகம் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கைதான 2 பேரின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதில் இருவருக்கும் 7 வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருப்பதும், அதில் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் அவர்கள் பெயரிலோ அல்லது குடும்பத்தினர், உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply