குரங்கு அம்மை நோய் தொடர்பாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் வெளிநாடுகளில் பரவி வருவதை அடுத்து மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை கண்டறியவில்லை. நோய் தொற்று கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டால் அது மேலும் பரவாமல் இருக்க அவரை தனிமைப்படுத்தப்பட வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்கு வது, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்டவைகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குரங்கு அம்மை நோய்க்கான பொது அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, தசைவலி, அதிக அளவு சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை உள்ளது. யாராவது ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டால் மாநில கண்காணிப்பு மற்றும் மத்திய கண்காணிப்பு மையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாநில அளவில் அரசுகள் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப் பட்டாலும் அது எப்படி பரவியது, நோயால் பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து வந்தார் என்ற தகவலை உடனடியாக சேகரிக்க வேண்டும். மாநில மற்றும் யூனியன் யூனியன் பிரதேச அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

Guidelines-for-Management-of-Monkeypox-Disease

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply