தெலங்கானா தனி மாநிலமாக உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட தெலங்கானா மாநிலம் பாராட்டதக்க வளா்ச்சியை அடைந்து உள்ளது. நாட்டின் தொழில் மையமாகவும் உருவெடுத்துள்ளது. அது தொடர்ந்து செழித்து, மக்களின் எண்ணங்களை, ஆசைகளை நிறைவேற்ற விரும்புகிறேன்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தெலங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான இணையற்ற அர்ப்பணிப்புடன் உள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் கலாசாரம் உலகப் புகழ்பெற்றது. தெலங்கானா மக்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
–திவாஹர்