விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக உலக சைக்கிள் தினம் கொண்டாட்டத்திற்கு நாளை மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைக்கிறார். அப்போது 750 சைக்கிள் வீரர்களுடன் 7.5 கி.மீ. தொலைவிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
நேரு யுவகேந்திரா சம்மேளனம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களின் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. நாட்டின் 75 முக்கிய இடங்களிலிருந்து 75 பங்கேற்பாளர்கள் 7.5 கி.மீ. தொலைவிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
உலக சைக்கிள் தினத்தையொட்டி நடைபெற உள்ள சைக்கிள் பேரணி மூலம் ஒரே நாளில் 1.29 லட்சம் இளம் சைக்கிள் வீரர்கள் 9.68 லட்சம் கி. மீ. தொலைவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
–எம்.பிரபாகரன்