நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மத்திய – மாநில அரசுகளின் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசினார்.வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை குறித்த காலத்திற்குள் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தயார் நிலை குறித்தும் அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
–திவாஹர்