உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.

உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.பிற்பகல் 1.45 மணியளவில் கான்பூரில் உள்ள பராங்க் கிராமத்திற்கு  செல்லும் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன்  இணைந்து பத்ரிமாதா மடத்திற்கு செல்லவுள்ளார். பின்னர் 2 மணியளவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பவன் செல்லும் பிரதமர், 2.15 மணியளவில் மிலன் கேந்திரா செல்கிறார். குடியரசுத் தலைவரின் மூதாதையர் இல்லமான இந்த மிலன் கேந்திரா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது தற்போது சமுதாய கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பின்னர் 2.30 மணியளவில் பராங்க் கிராமத்தில் நடைபெற உள்ள பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இந்தியாவின் செயல்திறனை பார்த்து உலக நாடுகள் பாராட்டுகின்றன என உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான தேசமாக உருவெடுத்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், கடந்த நிதியாண்டில் இந்தியா 41 ஆயிரத்து 700 கோடி டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி உத்திரப்பிரதேச முதலீட்டாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply