மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீஹர்ஷா தேவரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரதமர், ஸ்ரீஹர்ஷா தேவரெட்டி தங்கப்பதக்கம் வென்றது பெருமை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அவருடைய உறுதி உண்மையில் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவருடைய எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
–எம்.பிரபாகரன்