காணாமல் போன திருஞானசம்பந்தர் சிலை 57 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கோவிலை வந்தடைந்தது!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு ஜீன் 4 ம் தேதி கொண்டு வரப்பட்டன. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 10 உலோக சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் ரத்தின சாயாவனேஸ்வரர் திருக்கோயில் காணாமல் போன திருஞானசம்பந்தர் சிலை 57 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

இந்த சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து விசாரணை செய்து கடத்தப்பட்ட 2 அடி உயரம் கொண்ட திருஞானசம்பந்தர் சிலை சாயவனம் கோவிலுக்கு சொந்தம் என்பதனை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு மீண்டும் சொந்த ஊருக்கு எடுத்துவந்த சிலை தடுப்பு பிரிவு போலீசார் சாயவனம் கோயில் நிர்வாகத்திடம் நேற்று இரவு ஒப்படைத்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply