75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 2022 ஜூன் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நாடு முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய விமான நிலைய ஆணைய தெற்கு மண்டலம் சார்பில் அதன் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு விமான நிலையங்களிலம் தலா 50 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இதன் படி, சென்னை முகலிவாக்கம் விமான நிலைய அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் கடம்பம், அசோகா, நாகார்ஜூனா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மண்டல செயல் இயக்குனர் (தெற்குமண்டலம்) திரு. மாதவன், விமான நிலைய அதிகாரி முருகானந்தன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
–திவாஹர்