நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பிஜேபி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த எட்டாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் புத்துயிர் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் நேரடி அந்நிய முதலீடு உயர்ந்துள்ளதாகவும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் புதிய உச்சத்தை எட்டியதாகவும், புத்தாக்க தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கான இலக்குகளை எட்டுவதற்கு இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் உதவிடும் என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply