மேகாலயாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் கன்ராட் சங்மா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேகாலயாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சர் கன்ராட் சங்மா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.டூரா-வில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காரோ வனப் பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக அப்பகுதிகளில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருவதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply