தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம்!-போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்.

பள்ளி மாணவர்களுக்கு புதிய ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும் வரை பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜூன் 13-ம் தேதி அரசுப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், மாணவர்களுக்கான இலவச பயண அட்டை குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயணத்துக்கு ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும். அதுவரை அவர்கள் பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம்.

பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கண்காணிப்பு கோமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் முழுமையாக இதுகுறித்து கண்காணிக்கப்படும். மண்டல போக்குவரத்து அதிகாரிகள் பேருந்துகளில் சோதனை நடத்துவார்கள்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply