சிறந்த ஆரோக்கியத்துக்கும், உடல் நலத்துக்கும் யோகா பயிற்சி செய்யுமாறு மக்களை பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்றா நோய்களும் வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளும் பெருகி வரும் தற்காலச் சூழலில்,  யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். சிறந்த ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். யோகா தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“தொற்றா நோய்களும் வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும் , குறிப்பாக  இளம் வயதினரிடையே  பெருகி வரும் தற்காலச் சூழலில் ,  யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.”

திவாஹர்

Leave a Reply