முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம் என ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் இன்று முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக, ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அக்னிபத் திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்தார். முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம்.
பல்துறை அதிகாரிகளும் ஆலோசித்த பின்னரே அக்னிபத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தை இளமை சக்தியுடன் சீரமைக்க வலியுறுத்திய பரிந்துரைகளின் படி அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். சியாச்சினில் பணிபுரிவோருக்கு கிடைக்கும் அதே படித் தொகை அக்னிபத் திட்டத்தில் சேருவோருக்கும் கிடைக்கும். அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். ராணுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் 17,600 பேர் பணி முதிர்வு காலத்துக்கு முன்பே ஓய்வு பெறுகின்றனர்.
–திவாஹர்