இந்திய விமானப்படை அதன் முதலாவது போர்த்திறன் மற்றும் வான்வெளி செயல்திட்டம் குறித்த கருத்தரங்கை, புதுதில்லியில் உள்ள விமானப்படை கலையரங்கில் 24 ஜூன் 2022 அன்று நடத்தியது. விமான போர்த்திறன் கல்லூரி மற்றும் வான் சக்தி கல்வி மையம் ஆகியவற்றின் சார்பில் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். இதில் முப்படைகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் வான் சக்தி வல்லுனர்கள், நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கல்லூரிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் இதில் கலந்துகொண்டன.
திவாஹர்