நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும், அமிதாப் காந்தின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு அடுத்ததாக பரமேஸ்வரன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
63 வயதான பரமேஸ்வரன் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தவர். 17 ஆண்டு காலம் ஐஏஎஸ் பொறுப்பில் பணியாற்றிய பரமேஸ்வரன், 2009-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
–திவாஹர்