ரயில்வே துறையின் வர்த்தக வருவாய்க்கான மின்னணு ஏலத் திட்டத்திற்கான கொள்கையை அத்துறைக்கான அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதுதில்லியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், இதற்கான இணையதள சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
பயணியர் கட்டணமில்லாத இதர வருவாயை ஈட்டுவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இதன்மூலம், ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
–திவாஹர்