செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் வடஇந்தியாவில் 20 நகரங்களை கடந்து இந்தியாவின் மேற்கு பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

முதலாவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இந்தியாவின் மேற்கு பகுதியில் முதல் முறையாக இன்று ஜெய்ப்பூரை சென்றடைந்தது. அஜ்மீரை கடந்த பின்  இந்த ஜோதி ஓட்டம்  அகமதாபாத்திற்கு செல்லும். பின்னர் கெவாடியா, வதோதரா, சூரத், தண்டி, டாமன், நாக்பூர், புனே, மும்பை மற்றும் பாஞ்சிம் நகரங்களுக்குச் செல்லும். அதன்பிறகு, ஜோதி ஓட்டம் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் நுழையும்.

 முதல் கட்டமாக வடஇந்தியாவில் டெல்லி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 20 மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக ஜோதி ஓட்டம் நடைபெற்றது. 75-ம் ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவையொட்டி இந்த ஓட்டம் 75 நகரங்களில் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் முதலாவது ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ஜூன் 19-ந் தேதி தொடங்கி வைத்தார்.

சர்வதேச  செஸ் கூட்டமைப்பான ஃபிடே அமைப்பின் தலைவர் திரு ஆர்கடி வோகோவிச் ஜோதியை பிரதமரிடம் ஒப்படைத்தார். பின்னர் அதனை அவர் முன்னணி செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். பின்னர் இந்த ஜோதி தலைநகரில் உள்ள செங்கோட்டை, தரம்சாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்கம், அமிர்தசரசில் உள்ள அட்டாரி எல்லை, ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், லக்னோவில் உள்ள சட்டப்பேரவை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

திவாஹர்

Leave a Reply