இஸ்ரேல் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு எய்ர் லேபிட்-க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

இஸ்ரேல் பிரதமராக பொறுப்பேற்றுள்ள  திரு எய்ர் லேபிட்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நஃப்தாலி பென்னட் இந்தியாவின் உண்மையான நண்பராக திகழ்ந்ததற்கும் திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்;

“இஸ்ரேல் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு எய்ர் லேபிட்-க்கு அன்பான வாழ்த்துக்கள் மற்றும் இதயப்பூர்வ பாராட்டுக்கள். இருநாடுகளுக்கிடையே தூதரக உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள்  நிறைவடைந்ததை கொண்டாடும் வேளையில் நம்மிடையேயான  நீடித்த ஒத்துழைப்பை தொடர்ந்து மேற்கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்”.

“இந்தியாவின் உண்மையான நண்பராக திகழ்ந்த  திரு நஃப்தாலி பென்னட்டிற்கு நன்றி. நம்மிடையேயான பயனுள்ள கலந்துரையாடல்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களது புதிய பொறுப்பில் வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply