பானூர் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெலுங்கானாவில் உள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான அங்கு அமைக்கப்பட்ட பல புதிய உற்பத்தி வசதிகளை நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார்.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற பணியாளர்களிடம் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் , பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை நனவாக்கும் வகையிலும் பொதுத்துறை நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாக, உற்பத்தி வசதிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை தயாரித்து, முதல் இரண்டு ஆண்டுகளின் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததற்காக நிறுவனத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் எதிர்கால போர்க்கப்பல்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தை பன்முகப்படுத்தும் என்றும், இந்தத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்கு உதவும் என்றும் திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வசதி தொடங்கப்பட்டதன் மூலம், இந்த நிறுவனம் தன்னம்பிக்கையை நோக்கி மேலும் ஒரு படி எடுத்து வைத்துள்ளது, ஏனெனில் இந்த வசதி அதன் தற்போதைய மற்றும் எதிர்கால ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும்.

தொழில்நுட்பத்தின் தொடர்ந்து வளர்ந்து வரும் தன்மை மற்றும் மாறிவரும் காலங்களில் போரில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர் , உள்நாட்டுத் திறன்களுடன் தொழில்நுட்ப பயன்பாடு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆயுதப் படைகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை ஆகிய அனைத்து பாதுகாப்பு உபகரண பங்குதாரர்களுக்கும் – எப்போதும் உருவாகி வரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தயாரிப்புகள்/அமைப்புகளை உருவாக்குமாறு அவர் அறிவுறுத்தினார். தொழில்நுட்ப முன்கணிப்பை வலுப்படுத்துவது, அதிநவீன உற்பத்தி மற்றும் சோதனை திறன்களில் முதலீடு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply