குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு சிரோன்மணி அகாலிதள் ஆதரவு தெரிவித்துள்ளது.சண்டிகரில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பிஜேபியுடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும், குடியரசுத் தலைவரை பொறுத்த வரை திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
திவாஹர்