ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தரவரிசையில் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தரவரிசையில் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.
ஸ்டார்ட் சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லியில் வெளியிட்டார்.

இதில் குஜராத் மேகாலயா மற்றும் கர்நாடகா சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு, அஸ்ஸாம், பஞ்சாப்இ உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகள் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்கள் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான டான்சிம் மற்றும் சிறுஇ குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாநிலங்களின் ஸ்டார்ட்அப் தரவரிசையில் முன்னணி இடம் பெற்றமைக்காக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்ட் அப் சூழலை மேம்படுத்துவதற்கு மாநில அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால்இ வரும் ஆண்டுகளில் சிறந்த செயல்திறன் கொண்ட தரவரிசையில் தமிழகம் இடம்பெறும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இலக்குகளை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இது என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply