நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த முன்னேற்பாடுகளை பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளின் செயலர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் ஆய்வு செய்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் 18 அமர்வுகளாக 26 நாட்கள் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த அதிகாரிகள், தங்களது அமைச்சகங்கள் பற்றிய அவை நடவடிக்கைகள் குறித்த தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
இதேபோல், இந்த கூட்டத்தின் முன்னேற்பாடாக கடந்த ஜூலை 4ம் தேதி அன்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்