ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆக்ராதூத்தின் பொன்விழா கொண்டாட்டக் குழுவின் தலைமை புரவலரான அஸ்ஸாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ‘அஸ்ஸாமிய மொழியில் வடகிழக்கின் வலுவான குரல்’ என தைனிக் ஆக்ராதூத்தை இந்த நிகழ்வில் வாழ்த்தினார். பத்திரிகை ஊடகத்தின் மூலம் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்புகளை உயிருடன் வைத்திருப்பதற்காக அவர் பாராட்டினார்.
கனக் சென் டேகாவின் வழிகாட்டுதலின் கீழ், ஆக்ராதூத் எப்போதும் தேச நலனை முதன்மையாக வைத்திருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அவசரநிலை காலத்தில், ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்தபோதும், ஆக்ராதூத் நாளிதழும், தேகா ஜியும் பத்திரிகை தர்மத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை. மதிப்பு சார்ந்த பத்திரிக்கையின் புதிய தலைமுறையை அவர் உருவாக்கினார் என்றார் அவர் .
கடந்த சில நாட்களாக அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தால் பெரும் சவால்கள் மற்றும் சிரமங்களை சந்தித்து வருவதாக பிரதமர் அனுதாபம் தெரிவித்தார். அசாமின் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரும் அவரது குழுவினரும் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். அஸ்ஸாம் மக்களின் சிரமங்களைத் தணிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதாக ஆக்ராதூத் வாசகர்களுக்கு பிரதமர் உறுதியளித்தார்.
இந்திய பாரம்பரியம், கலாச்சாரம், சுதந்திரப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் பயணத்தில் இந்திய மொழிப் பத்திரிகையின் மகத்தான பங்களிப்பை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவில் மொழி இதழியல் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் மாநிலம் பத்திரிகையின் பார்வையில் மிகவும் துடிப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு அசாமிய மொழியில் இதழியல் தொடங்கப்பட்டு, காலப்போக்கில் வலுவடைந்து கொண்டே வந்திருக்கிறது என்று அவர் கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளில் தைனிக் அகர்கரின் பயணம் அசாமில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் கதையை விவரிக்கிறது என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த மாற்றத்தை உணர்த்துவதில் மக்கள் இயக்கங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. மக்கள் இயக்கங்கள் அசாமின் கலாச்சார பாரம்பரியத்தையும் அசாமிய பெருமையையும் பாதுகாத்தன. இப்போது அஸ்ஸாம் மக்களின் பங்களிப்புடன் ஒரு புதிய வளர்ச்சிக் கதையை எழுதுகிறது.
பேச்சுவார்த்தை நடந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறிய பிரதமர். உரையாடல் மூலம் சாத்தியங்கள் விரிவடைகின்றன என்றார். எனவே, இந்திய ஜனநாயகத்தில் அறிவு ஓட்டத்துடன், தகவல் ஓட்டமும் தொடர்ந்து பாய்ந்து வருகிறது. ஆக்ராதூத் அந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குறிப்பிட்ட மொழி மட்டுமே தெரிந்த சிலருக்கு அறிவுசார் இடம் மட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி உணர்ச்சி மட்டுமல்ல, அறிவியல் தர்க்கமும் கூட என்றார். மூன்று தொழில் புரட்சிகள் பற்றிய ஆராய்ச்சியில் பின்தங்கியிருப்பதற்கு இது ஒரு காரணமாக பார்க்கப்படலாம். நீண்ட கால அடிமைத்தனத்தின் போது இந்திய மொழிகளின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது என்றும், நவீன அறிவியலில், சில மொழிகளுக்கு மட்டுமே ஆராய்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் பெரும் பகுதியினருக்கு அந்த மொழிகளை, அந்த அறிவை அணுக முடியவில்லை. நுண்ணறிவின் நிபுணத்துவத்தின் நோக்கம் சுருங்கிக்கொண்டே இருந்தது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக, கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் தொகுப்பும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 4வது தொழிற்புரட்சியில், உலகை வழிநடத்த இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்புக்கு எங்கள் தரவு ஆற்றல் மற்றும் டிஜிட்டல் விரிவாக்கம் காரணமாக உள்ளது. மொழியின் காரணமாக சிறந்த தகவல், சிறந்த அறிவு, சிறந்த திறன் மற்றும் சிறந்த வாய்ப்பு ஆகியவற்றை எந்த இந்தியனும் இழந்துவிடக்கூடாது, இது நமது முயற்சி என்று பிரதமர் வலியுறுத்தினார். அதனால்தான் தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளில் படிப்பதை ஊக்கப்படுத்தினோம் என்றார் அவர். தாய்மொழியில் அறிவு என்ற கருப்பொருளில் தொடர்ந்து பேசிய பிரதமர், “உலகின் சிறந்த உள்ளடக்கத்தை இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதே இப்போது எங்களின் முயற்சி. இதற்காக தேசிய மொழிபெயர்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். அறிவு மற்றும் தகவல்களின் மிகப்பெரிய களஞ்சியமாக இருக்கும் இணையத்தை ஒவ்வொரு இந்தியனும் தனது சொந்த மொழியில் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த முயற்சி என்றார் அவர். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மொழி இடைமுகமான பாஷினி தளம் பற்றியும் அவர் பேசினார். “சமூக மற்றும் பொருளாதாரம் என அனைத்து அம்சங்களிலும் இணையத்தை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு கிடைக்கச் செய்வது முக்கியம்’’ என்று அவர் தெரிவித்தார்.
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் கலாச்சார செழுமையை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், அஸ்ஸாம் இசையின் வளமான மரபைக் கொண்டுள்ளது என்றும், அது உலகை பெரிய அளவில் சென்றடைய வேண்டும் என்றும் கூறினார். அஸ்ஸாமின் பழங்குடியினரின் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கு இப்பகுதியின் சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு தொடர்பான கடந்த 8 ஆண்டுகளின் முயற்சிகள் பெரிதும் பயனளிக்கும் என்றார்.
தூய்மை இந்தியா இயக்கம் போன்ற பிரச்சாரங்களில் நமது ஊடகங்கள் ஆற்றிய நேர்மறையான பங்கு இன்றும் நாடு மற்றும் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது என்று பிரதமர் கூறினார். “அதேபோல், அமிர்த பெருவிழாவில் நாட்டின் உறுதிப்பாட்டில் நீங்களும் பங்கு பெறலாம்” என்று பிரதமர் கூறினார்.
“அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டுள்ள அறிவுள்ள சமுதாயம் நம் அனைவருக்கும் இலக்காக இருக்க வேண்டும், இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
எம்.பிரபாகரன்